Figure

First I am sorry to both the English only blog readers and Tamil only blog readers. This post is going to be a mixture of both.

I encountered this tweet in the timeline today, which lead to a small conversation and has now made me to wake up at 1.00 AM to write this post. I couldn’t sleep with the conviction that my casual usage of the word “figure” might instigate someone to rape.

Mr @4SN retweeted the tweet with a set of question marks and astonishment markers, which I took as confused expression. Because I was really confused. How can calling a girl as “figure” be the first step to be rape? So tweeted back and got a reply as:

I read the reply and went to sleep. I know, I have nothing to defend my stand, i.e calling the first statement a bit too much. But then it dawned on me that the statement itself is a classic example of society’s escapism from responsibility. And a classical example of “finger-pointing” mentality which our society has cultivated. I will write a lengthy reply to that statement in Tamil mixing English where ever I feel comfortable.

@icarusprakash நீங்க என்னுடைய கேள்வியை வேற contextக்கு கொண்டு போறீங்க. நண்பன், மச்சான், அக்கா தங்கச்சினு related parallel குடுத்ததுனால இரண்டையும் சேர்த்து பதில் சொல்லி விட்டீர்கள். அதற்கு என்னிடம் எதிர்வாதம் இல்லை. நான் ஒரு unrelated parallel சொல்ரேன். ** அம்மா குழந்தையை homework செய்ய வைக்கவோ அல்லது மருந்து சாப்பிட வைக்கவோ அடிப்பேன், உதைப்பேன்னு மிரட்டுவதுதான் நாட்டில் வன்முறைக்கு முதல்ப்படியா? **

நீங்கள் ஆமாம் என்று சொன்னால் இந்த பதிவை மூடிவிடவும். நீங்கள் விவாதத்தில் வென்று விட்டீர்கள், இதற்குக்கீழ் உள்ளது உங்களுக்கு குப்பை.

***

மரியாதைக்குறிய @icarusprakash அவர்களே இதற்க்கு கீழே உள்ளது உங்களை personalஆ எந்த வகையிலும் தாக்க நான் எழுத வில்லை. என்னுடை கருத்துக்கு வழு சேர்க்க மட்டுமே. No personal offence intended. I hope you will take it in the spirit of discussion.
***

I am writing the below response not just a response to the tweet, but as a statement against those who employ the same kind of escapism as reflected in that tweet.
***

அம்மா மிகச்சிறு வயதில் அடிப்பேன் எனபதும் உதைப்பேன் என்பதும் வன்முறையத் தூண்டவில்லை என்றால் அப்புறம் “பிகர்” என்று அழைப்பது மட்டும் எப்படி கற்ப்பழிக்கும் எண்ணத்தைத் தூண்டும்? இதில் ஒழிந்திருக்கும் escapism-த்திற்கு வருவோம்.

சமூகம் தான் செய்யும் ஒவ்வொரு தப்புக்கும் இன்னொருத்தரை கை காட்ட முயற்சிக்குது. இன்று பெருசா பேசப்படுற பாலியல் கொடுமைக்கும் அதே மாதிரி மூன்றாம் மனசனை கை காட்டுகிறது சமூகம். இந்த generation பன்ற தப்புக்கு போன generation ஆளுங்க (எங்களோட பெத்தவங்களும், ஆசிரியர்களும்) பொறுப்பேத்துக்க தயாரா இல்லைங்கறதுதான் உன்மை.

நான் பள்ளிகூடம் படிச்சுகிட்டு இருந்த வருடங்களில் டிவில ஒரு விளம்பரம் வரும், அதுல பொண்ணு ஒருத்தி “பாடத்தெரியுமா? ஆடத்தெரியுமா? இதெல்லாம் (மப்பிளைகிட்ட) நாங்கேட்டா?” அப்பிடினு சொல்லீட்டு சிரிப்பா. ஒரு நாள் இதப்பாத்துட்டு “இவளுகளுக்கு ஓவரா ஏறிப்போச்சு” அப்பிடின்னு எங்க அம்மா முன்னாடி சொன்னேன். சப்புன்னு விழுந்துச்சு கண்ணத்துல “பொண்ணுங்கன்னா உனக்கு அவ்வளவு எளக்காரமா போச்சா?”னாங்க. BE சேந்த சில மாசங்களிலேயே ஒரு “feminism” supporter ஆகீட்டேன். இன்னைக்கும், அன்னைக்கு பேசுன வாக்கியத்துக்காக வெக்கப்படுறேன். மாற்றத்துக்கு காரணம்? நான் அது வரைக்கும் பொண்ணுங்க கிட்டயே பழகனது கிடையாது. சமுதாயத்துல சராசரி மனுசன மாதிரி பொண்ணுங்கன்னா இதத்தான் போடனும், இப்படித்தான் இருக்கனும்னு நெனச்சுகிட்டு இருந்தேன். காலேஜுல சேந்த்ததுக்கு அப்புறம்தான் பல விசயங்கள் புரிஞ்சுது. பொண்ணுங்கள மதிக்கக் கத்துகிட்டேன்.

இங்க கவணிக்க வேண்டியது என் மனமாறுதலை அல்ல. ஆடித்து திருத்துன அம்மாவையும், மாற வைத்த சூழலையும். ஆனால் எங்கூட படிக்கிற எத்தனையோ பேர் இன்னும் பெண்களை objects-ஆ பக்கறாங்க. அவங்ககிட்ட யாரும் இதுவரைக்கும் புரியும்படி சொல்லல. Degree முடிச்சாச்சு, இனிமேல் யாரு வந்து சொல்லிக்குடுக்கப்போறா? இந்த இடத்தில் இருந்து சொல்றேன், தவறிப் போன கல்வியும், பெற்றோரின் வழிகாட்டுதலும் இந்த women are objects mentality-க்கு முக்கியக் காரணம்.

இதை மறைக்க சமுகத்தில் பல பேர் பல வகையான யுக்திகள பயன்படுத்துறீங்க.

  • Media-வ குத்தம் சொல்லும் ஒரு கும்பல். தங்களின் குழந்தைகள் என்ன டிவில பாக்காறாங்க, அதுக்கு எப்பிடி react பண்றாங்கன்னு எத்தன பேர் கண்டுகிறாங்க? அத கவணிச்சாலே பல விசயங்கள சொல்லிக்குடுக்களாம். உனக்கு இந்த program எனக்கு இந்த programனு நேரம் பிரிச்சு வச்சுகிட்டு, என்ன விசயங்களை மகன் உள்வாங்குறான், அதை எப்படி எடுத்துக்கறான்னே தெரியாம வாழ்றாங்க. இது கடமை தவறல் இல்லையா?
  • Modern youth-ஐ குறை சொல்ற அடுத்த கும்பல். T-shirt & jeans போடறதும், internet ல chat பண்றதும், சைட் அடிக்கிறதும் வாழ்க்கையின் மண்ணிக்க முடியா குற்றம், அதுதான் இந்த generation கெட்டுப்போறதுக்கே காரணம் அப்பிடிங்கறவுங்க எத்தன பேர் தன் பையங்கிட்ட internet la தன் பையன் என்ன பண்றான்? College life எப்பிடிப் போகுது? கூட படிக்கறவுங்க எப்படி? -ன்னு எல்லாம் சகஜமா பேசுறீங்க? இத சொன்ன உடனே தப்பையன கைதிய விசாரிக்கற மாதிரி விசாரிப்பாங்க சிலர். அந்த அந்த வயசுல சொல்லிக்கொடுக்க வேண்டிய விசயங்களை சொல்லிக்கொடுக்காமல் “இந்த காலத்துப் பசங்க எங்க நாம சொன்னக்கேக்குது” என்று தட்டிக்கழிப்பது, அப்படி இல்லைனா “இந்த காலத்து பசங்க நமக்கே பாடம் எடுப்பங்க” என்று முயற்சியெடுக்காமல் விடுவதும்தான் ரொம்ப அதிகம் காணப்படுகிற உண்மை.
  • அதேபோல் mark வாங்க வைக்கிறதுதான் என் கடமை, மத்தபடி எனக்கும் பையனுக்கும் சம்பந்தமில்லைங்கற ஆசிரியர்கள் ரொம்ப அதிகமாயிட்டாங்க. அதற்க்கு மேல ஒரு படி boys only வகுப்புகள்ள என்ன வேணும்னாலும் பேசலாம், girls only வகுப்புகள்ள எத சொல்லி வேணும்னாலும் திட்டலாம்னு இருக்கும் ஆசிரியர்களும் உண்டு.
  • வயசுப்பசங்களும் வயசுப்பொண்ணுங்களும் சேந்தாலே தொல்லைன்னு பிரித்தே வைக்கிற “நல்ல” ஆசிரியர்கள். இவங்க discipline அப்பிடிங்கற பேர்ல அந்த வயசுல சொல்லிக்குடுக்க வேண்டிய விசயங்களை சொல்லிக்கொடுக்காம தப்பிச்சுக்கறாங்க அப்பிடிங்கறதுதான் உண்மை.
  • கடைசியா சூழல் – எத்தனையோ வீடுகள்ல கணவன் மனைவிய “வாடி, போடி”ன்னு அவமரியாதையா (ஆமாம். மனைவியை டி போடுவதும் அவமரியதைதான் – எனக்கு அம்மா சொன்னது) அழைப்பது, ஆண் குழந்தைகளிடம் பாரபட்சமாக நடந்துக்கிறது, பசங்களும் பொண்ணுங்களும் சகஜமா பேசரத தடுப்பதுன்னு இன்னும் எத்தனையோ இடைவெளி அமைக்கும், ஆணாதிக்கத்தை அங்கீகரிக்கும் சூழல்கள உருவாக்குறீங்க

இப்படி சமூக சீரழிவுக்கான முதல்ப்படி – முன் உதாரணங்களான பெற்றோர்கிட்டையும், ஆசிரியர்கிட்டையும் தான் இருக்குன்னு ஒத்துகிட்டாவே, நீங்க கை காட்டும் பல சப்பை காரணங்களான “பிகர்”னு கூப்பிடறது, “அடிடா அவள, ஒதடா அவள”ன்னு பாட்டுப் படத்துல வர்றது, சோப்பு விளம்பறத்துல துணியில்லாம குளிக்கறது, பக்கத்து வீட்ல நாய் கத்துவது ஆகியவை அர்த்தமில்லைங்கறது புரியும்.

sons-not-to-rape

சமூகத்திருத்தம் வீட்டில் துவங்க வேண்டும். அதற்க்கு முதலில் தவறு நம் வீட்டில் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

I hope I conveyed a point. And going to sleep at 4.00 am. Now I can sleep without conviction.

P.S: You might be tempted to point out the irony that this post itself is an escapist post, trying to put the blame on the parents and teachers. I wouldn’t deny the escapist part, but I wouldn’t accept the “blame is one me” part as well. More accountability in this case, is with the way a person is brought up (my teachers and parents) that what the person is(me).

Note: I know my Tamil is sub-standard. This is not a essay with an emphasis for literature and culture. This essay is about ideas. So don’t get carried away by the language and miss forest for the trees.

Image: Obtained by Google search. Copyright is with whomsoever concerned, not with me.